வெள்ளி, 9 ஜூலை, 2010

அழிக்கப்படும் உலகங்கள்

அழிக்கப்படும் உலகங்கள்



ன் எலும்புகள் ஓடிய
நான் சுமக்கும் புத்தக மூட்டையைவிட
என்னை அழுத்தி வருத்தும்
உங்கள் ஆசைகளும் எதிர்பார்ப்புகளும்
என் உலகத்தை தின்றுவிடுகின்றன.
பிறரின் உலகத்தை மகிழ்வித்து
பொம்மையாக்கப்பட்ட நான் இயந்திரமாகிறேன்.
அழிக்கப்பட்ட உலகத்தைத் தேடும் இயந்திரங்கள்
அழிவுக்கானதாயும் மாறலாம்
அப்பொழுது குழந்தை உள்ளங்களைத் தேடாதீர்
அப்பாவே அம்மாவே.

அழிக்கப்படும் உலகங்கள்

அழிக்கப்படும் உலகங்கள்



ன் எலும்புகள் ஓடிய
நான் சுமக்கும் புத்தக மூட்டையைவிட
என்னை அழுத்தி வருத்தும்
உங்கள் ஆசைகளும் எதிர்பார்ப்புகளும்
என் உலகத்தை தின்றுவிடுகின்றன.
பிறரின் உலகத்தை மகிழ்வித்து
பொம்மையாக்கப்பட்ட நான் இயந்திரமாகிறேன்.
அழிக்கப்பட்ட உலகத்தைத் தேடும் இயந்திரங்கள்
அழிவுக்கானதாயும் மாறலாம்
அப்பொழுது குழந்தை உள்ளங்களைத் தேடாதீர்
அப்பாவே அம்மாவே.

வெள்ளி, 18 ஜூன், 2010

நாகரீகச் சொற்கள்

உள்ளுக்குள்ளிருந்து வெளியேறு வார்த்தைகள்
இப்பொழுதெல்லாம் ஆடை போர்த்திக் கொள்கின்றன
வெளிப்படையாக இல்லாமலிருக்கும் அதன் தோற்றம்
எனக்குள்ளேயே ரசனையை உண்டாக்கிவிட்டது
உருமாற்றம் பெற்றதாக சில எண்ணங்கள்
வசை பாடினாலும் வேறு வழியில்லாமல்
அப்படிதான் வெளியேறுகிறது

வெளியெங்கும் வெளிப்படையான சொற்களை
காணவில்லைஎனும்போது நியாயம்தான்

செவ்வாய், 11 மே, 2010

தேடப்படுபவள்

என் காட்சிகள் முழுதும்
உலவிய அவள்
அகப்புற விழிகளைக் கைப்பற்றி ஓடுகிறாள்

உணர்வுகளால் தளைப்படுத்த விரையும்
செல்களிலும் புகுந்து
நரம்பு புடைக்க நழுவுகிறாள்

மயிர்களனைத்தும் கைகளாய்நீட்டி
தழுவத் துடிக்கும்
உடல் இளைக்க
வளர்ந்துகொண்டேயிருக்கிறாள்
மனதெங்கும்

அனைத்து வேலைகளையும் கொண்டு
சிறப்புப்படை அமைத்திருக்கிறேன்
தேடப்படுபவள்
அருகில்தானிருக்கிறாள்

தூவலியல்

வெளிச்சம் பரவிய இடந்தோறும்
வேலையற்று
இருள்தீண்டும் இடமெங்கும்
ஓய்வற்று
அழுந்த வரைந்தோடும் விரல்களால்
பகுத்துப் படிந்து எழுகிறது
பார்வைஎங்கும் பாய்ந்துவரும்
பகலிரவு பிணைக்கப்பட்ட
வெளிவழி சமகோட்டிலும்
விழிவழி செங்குத்தாகவும்

அமையக் கட்டப்பட்டிருக்கும் காட்சிகள்

ஒலி உயிர் உலகம்

ஒலித் துகிலுரிக்கப்பட்ட ஓய்வணைக்க எங்கும்
உள்ளம் உடலுக்குள் அழுந்தி ஓடுகிறது
குருதியில்

சுவர் நிழலுக்குள் கட்டமைக்கப் பட்ட
நகர உலக இரவுகளின் அமைதி
கருப்பைக்கு வெளியே பொருத்தப்பட்ட
மின்விசிறி இதயத்துடிப்புகளில் உறிஞ்சப்படுகின்றன

இமைச்சுவர் விலக்கிய விழிகள் உலவிய
வெளியிலும் இரைச்சலிட்டுக் கொண்டிருக்கின்றன
ஆங்காங்கு கழற்றிச் சுழன்றோடும் இயந்திர
ஆடைகளின் இயக்கப் பெருமூச்சுகள்

ஓரளவேனும் இயற் கைபிடித்த
இல்ல உறுப்புகளின் ஓய்வுகளும் உழைத்த
களைப்பு வெளிப்பாடுகளில் அமைதியற்றுக் கிடக்கின்றன
சிற்றூர் வாழ்சூழ் நிலைமைகள்

ஒளியற்ற ஓய்வுக்காய் ஓடியோடி
காடுகளின் மடியில் வீழ்ந்தால்கூட
உருவமற்ற கற்றணைத்த இலைகளின் முனகல்

செவியற்றும் வரிவடிவில் துரத்தும் நினைவொலிகள்
நினைவற்றுப் போனால்தான் ஒழியுமோ?

கடவுகளின் இனிமைகள்

இனிமையானது என்ற
காரணத்திற்காகவே மட்டும்

மேற்கொண்ட அத்தனை
செலவுகளும் எல்லைகளற்றுக் கிடக்க
செலவுகளும் இலக்கற்றுக் கிடக்க
செலவழிந்த வாழ்நாட்களின்
விளிம்பில் நின்று
திரும்பிப் பார்த்தபோது
கடந்த தொலைவுகள் யாவும்
கடந்த செலவுகளைக் காட்டிலும்
இனிமை மிக்கதாயிருக்கிறது